2026 ஏப்ரல் 16, வியாழக்கிழமை

விமர்சனங்களை விளக்கினார் அரவிந்தகுமார்

எம். செல்வராஜா   / 2020 மே 26 , பி.ப. 01:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொவிட்-19 நிவாரண நிதி 5,000 ரூபாய் வழங்கல் தொடர்பான தன்னால் வெளியிடப்பட்ட கருத்து திரிபுபடுத்தப்பட்டு, சமூக வலைதளங்களில் தனக்கு எதிரான விமர்சனங்களும் குற்றச்சாட்டுகளும் பதிவிடப்பட்டு வருவதாக, பதுளை மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அ.அரவிந்தகுமார் தெரிவித்தார்.

இது தொடர்பான, அவருடைய பணியகத்தில் இன்று (26) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துதத் தெரிவிக்கும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

அரசாங்கத்தால் வழங்கப்படும் 5,000 ரூபாய், பெருந்தோட்டப் பகுதிகளில் தகுதியுள்ள அனைவருக்கும் கிடைக்கவேண்டும் என்பதில், தான் உறுதியாக இருந்து வருவதாகவும் இந்தத் தொகை கிடைக்காதவர்கள் குறித்து அதிகாரிகளின் கவனத்துக்குக் கொண்டு வந்து, நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அவர் கூறினார்.

முதலாம் கட்ட நிவாரணமே ஒழுங்காக வழங்கப்படாத நிலையில், இரண்டாம் கட்டமாக நிதி வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது என்றும் இதற்கான விண்ணப்பங்கக்கு பணம் வசூலிக்கப்படுவதாகவும் பாலியல் இலஞ்சம் கோரப்படுவதாகவும் தனக்கு அறியக் கிடைத்து என்றும் அவர் கூறினார்.

இது தொடர்பான தான் மனம் வருந்தி தெரிவித்த கருத்தில், “பாலியல்” எனும் சொல்லை மாத்திரம் பயன்படுத்தி, பெருந்தோட்ட பெண்கள் பாலியல் ரீதியில் சோரம் போனால் மட்டும் , 5,000 ரூபாய் வழங்கப்பட்டதாக தான் கூறியதாக, உண்மைக்குப் புறம்பான செய்திகளை வெளியிட்டு வருவதாக அவர் கூறினார்.

இந்நிலையில் தனக்கு எதிரான கண்டனங்களும் கருத்துப் பகிர்வுகளும் வெளியிடப்பட்டு வருவதாகவும் உண்மையைப் புரிந்துகொள்ளாதவர்களும் பக்கச் சார்புள்ளவர்களுமே, இவ்வாறான நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார்.

“கெட்டிக்காரன் புழுகு எட்டு நாட்களுக்கு மாத்திரமே” என்ற வாய்கியத்துக்கமைய,  உண்மைகள் எதிர்வரும் காலங்களில் வெளிப்படும் என்று அவர் மேலும் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .