2025 மே 19, திங்கட்கிழமை

’விருந்தினர்களின் இரவில்’ 94 பேர் கைது

R.Maheshwary   / 2022 ஓகஸ்ட் 31 , பி.ப. 01:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாலித ஆரியவன்ஸ

பதுளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் இன்று (31) அதிகாலை முன்னெடுக்கப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின் போது, பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்ட 94 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

“விருந்தினர்களின் இரவு” என பெயரிடப்பட்டு முன்னெடுக்கப்பட்ட குறித்த விசேட சோதைனை நடவடிக்கையானது, அதிகாலை 3 மணிதொடக்கம் 5 மணி வரை முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது 10 பேர் சந்தேகத்தின் பேரிலும் நீதிமன்ற பிடிவிறாந்து விதிக்கப்பட்ட 32 பேரும் போதைப் பொருள்களுடன் மூவரும் சட்டவிரோத மதுபாவனை தொடர்பில் 11 பேரும் சாரதி அனுமதிப்பத்திரம் இன்றி ஒருவரும் வேறு போக்குவரத்து குற்றச்சாட்டுகள் தொடர்பில் 37 பேரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

பதுளை சிரேஸ்ட பொலிஸ் அதிகாரி சுஜித் வெதமுல்லவின் ஆலோசனைக்கமைய ஏனைய பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகளின் வழிநடத்தலில் இந்த சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டிருந்தது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X