Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 16, புதன்கிழமை
Kogilavani / 2017 செப்டெம்பர் 06 , மு.ப. 11:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
மு.இராமச்சந்திரன்
ஹட்டன் வெளிஓயா புதிய வீடமைப்புத் திட்டத்தின் அபிவிருத்திப் பணிகளை, கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஷ்ணன், நேரில் சென்று பார்வையிட்டார்
வெலிஓயா தோட்டத்தில் 30 வீடுகளைக் கொண்ட புதிய வீடமைப்புத் திட்டம், தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதுடன் வீடுகளை அமைக்கும் பணிகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இதேவேளை, இவ்வீடமைப்புத் திட்டத்துக்கு நன்மையளிக்கும் வகையில், கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஷ்ணனின் வேண்டுகோளுக்கு அமைவாக, தேசிய வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சரின் அனுசரணையில், கொங்ரீட் வீதி அமைக்கும் பணியும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
வீடுகளை மக்களிடம் கையளிக்கும் நிகழ்வு வெகுவிரைவில் நடைபெற உள்ளதால், வீடமைப்பு மற்றும் வீதி புனரமைப்பு வேலைத்திட்டங்ளை, இராஜாங்க அமைச்சர் நேரில் சென்று பார்வையிட்டார்.
அவருடன் மத்திய மாகாணசபை உறுப்பினர் ஆர்.ராஜாரம், மலையக தொழிலாளர் முன்னணியின் நிதி செயலாளர் எஸ்.விஸ்வநாதன் உள்ளிட்டோரும் சென்றிருந்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago