2026 ஏப்ரல் 12, ஞாயிற்றுக்கிழமை

‘வீதி அபிவிருத்திக்கு நிதி போதவில்லை’

Kogilavani   / 2017 ஜூலை 04 , மு.ப. 10:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

மொஹொமட் ஆஸிக்   

மத்திய மாகாணத்துக்கு உட்பட்ட 4,000 கிலோமீற்றர் வீதியை பராமரிப்பதற்காக, மத்திய அரசினால் வருடாந்தம் ஒதுக்கப்படும் நிதியானது, இம்முறை குறைக்கப்பட்டுள்ளதால், வீதிகளை பராமரிப்பதில் பாரிய சிக்கல்களை எதிர்கொண்டுள்ளதாக, மத்திய மாகாண வீதி அபிவிருத்தித்துறை அமைச்சர் எதிரிவீர வீரவர்தன தெரிவித்தார்.  

“வீதி பராமரிப்புக்காக, வருடமொன்றுக்கு 1,500 மில்லியன் ரூபாய் தேவைப்படுகின்ற போதிலும், மத்திய அரசானது இம்முறை 170 மில்லியன் ரூபாய் நிதியையே ஒதுக்கியுள்ளது” என்றும் அவர் கூறினார்.   

இது தொடர்பாக மேலும் கூறியுள்ள அவர்,   

“மாகாண சபைக்கு உரித்தான 4,000 கிலோ மீற்றர் வீதிகளை தவிர, மாகாண சபைக்கும் உள்ளூராட்சி மன்றங்களுக்கும் சொந்தமில்லாத 1,000 கிலோமீற்றர் வீதிகளும் உள்ளன. இவ்வீதிகளையும், மத்திய மாகாண சபையே, பராமரிக்க வேண்டியுள்ளது.  

இவை அனைத்தையும் பாராமரிப்பதற்கு, வருடமொன்றுக்கு ஆகக்குறைந்த தொகையாக, 1,500 மில்லியன் ரூபாய் தேவைப்படுகின்றது.   

மாகாண பாதைகளை பராமரிப்பதற்காக, கடந்த வருடம் 900 மில்லியன் ரூபாய் வரை கிடைத்தப் போதிலும் இம்முறை, 170 மில்லியன் ரூபாய் மட்டுமே கிடைத்துள்ளது.  இந்தத் தொகையானது, ஒரு பாதையை பராமரிக்கக்கூட போதுமானதல்ல” என்று, அவர் மேலும் கூறினார்.   


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .