Editorial / 2020 செப்டெம்பர் 16 , பி.ப. 02:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.ஏ.எம்.ஹசனார்
பதுளை மாவட்டம், பசறைத் தேர்தல் தொகுதியில் அதிக பெருந்தோட்டங்களை உள்ளடக்கிய பிட்டமாருவ, ரோபேரி ஆகிய தோட்டங்களுக்குச் செல்லும் பசறை-பிட்டமாருவ வீதி, பல வருடங்களாக திருத்தப்படாமல் குன்றும் குழியுமாகக் காணப்படுவதால், இவ்வீதி வழியாகப் பயணிக்கும் மக்கள், பாரிய சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.
தாங்கள் பஸ்களில் பயணிக்கும் ஒவ்வொரு நாளும் குன்றும் குழியுமாகவுள்ள இடங்களுக்கு, வீதியில் சிதறிக் கிடக்கும் கற்களை நிரப்பியே பயணத்தை மேற்கொள்ள வேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாகவும் பயணிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.
பாதை புனரமைப்பின்றிக் காணப்படுவதால், பயணம் ஸ்தம்பிதமடைந்து பல மணிநேரம் வீதியில் கழிவதாகவும் இதனால் குறித்த நேரத்துக்குப் பாடசாலைகளுக்கோ அல்லது ஏனைய வேலைகளுக்குச் செல்லவோ முடியாதுள்ளதாகவும் மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.
எனவே, பதுளை - மொனராகலை மாவட்ட எல்லை பிரதேசத்தைக் கொண்ட மேற்படி வீதியைப் புனரமைப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு பிரதேச மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
6 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
6 hours ago