2025 மே 19, திங்கட்கிழமை

வெளிக்கள உத்தியோகத்தர் ஒருவருக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

Freelancer   / 2022 ஓகஸ்ட் 17 , மு.ப. 09:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

துவாரக்ஷான்

நானுஓயா - டெஸ்போட்  தோட்டம், சீனிகத்தால பிரிவில் உள்ள வெளிக்கள  உத்தியோகத்தர் ஒருவருக்கு எதிராக ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

48 வயது தோட்டத்  தொழிலாளி  ஒருவர், நேற்றுமுன்தினம் (15) மாலை தோட்ட காரியாலயத்தில்  வைத்து வெளிக்கல உத்தியோகத்தர் ஒருவரால் தாக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.

இந்நிலையில் தோட்ட வெளிக்கல உத்தியோகஸ்தர் ஏன் தாக்கினார்? என்பது தொடர்பாக சரியான விளக்கம் கிடைக்காத காரணத்தினால் நேற்று (16)  காலை தோட்டத்தில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தோட்ட  நிர்வாகத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர் .

பதாதைகள் ஏந்தி தோட்ட நிர்வாகத்திற்கு எதிராக கோஷங்கள் எழுப்பி தொழிலாளர்கள் தமது எதிர்ப்பினை சுமார் காலை 9 மணி தொடக்கம் 11 மணி வரை முன்னெடுத்தனர்.

ஆர்ப்பாட்டம் நடைபெற்ற இடத்துக்கு தோட்ட அதிகாரியான மதுரங்க வந்த போதிலும் ஊடகவியலாளர் அந்த இடத்தில் இருந்ததை கண்டு அங்கிருந்து உடனடியாக வாகனத்தில் சென்றதுடன், தமக்கு சரியான  தொழிலாளர்கள் சரியான முடிவு கிடைக்கும்  வரை வேலை நிறுத்தத்தில் தொடர்ந்து ஈடுபடுவதாகவும்  தொழிலாளர்கள் தெரிவித்தனர். (R)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X