2026 ஏப்ரல் 26, ஞாயிற்றுக்கிழமை

ஹாலிஎல தீ விபத்தில் ஒருவர் பலி

George   / 2016 செப்டெம்பர் 19 , மு.ப. 10:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஆர்.கோகுலன்

பதுளை ஹாலிஎல ஊவா விஞ்ஞான கல்லூரியில் திடீரென இன்று காலை ஏற்பட்ட தீ விபத்தில் பாடசாலையில் சேவை புரிந்து வந்த சிற்றூழியர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

பாடசாலையில் வேல்டிங் செய்துகொண்டிருந்த போது, திடீரென எரிவாயு சிலிண்டர் வெடித்ததில் ஏற்பட்ட தீயில் சிக்குண்டு அவர், உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

பதுளை ஹிந்தகொட பிரதேசத்தை சேர்ந்த லக்ஸ்மன் விஜேதுங்க எனும் 32 வயது நபரே மேற்படி விபத்தில் உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பில் பதுளை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .