2026 ஏப்ரல் 15, புதன்கிழமை

ஹொலிரூட் ஈஸ்ட் தோட்டத்தில் தொழிலாளர்கள் பணிப்பகிஷ்கரிப்பு

Gavitha   / 2016 ஓகஸ்ட் 22 , மு.ப. 11:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

இ.ராமச்சந்திரன், புஸ்பராஜ்

தலவாக்கலை ஹொலிரூட் ஈஸ்ட் தோட்டத்தைச் சேர்ந்த 300க்கும் மேற்பட்ட  தொழிலாளர்கள், அத்தோட்ட நிர்வாகத்துக்கு எதிராக திங்கட்கிழமை (22) வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஹேலீஸ் கம்பனியின் கீழ் இயங்கும் ஹொலிரூட் ஈஸ்ட் தோட்ட நிர்வாகத்தின் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தே இந்த வேலைநிறுத்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

ஹொலிரூட் ஈஸ்ட் தோட்ட நிர்வாகத்துக்கு கீழ், 400க்கு மேற்பட்ட தொழிலாளர்கள் தொழில் புரிகின்றனர். இவர்களுக்கு, வாரத்துக்கு 4 நாட்களுக்கு மாத்திரமே தோட்ட நிர்வாகம்; வேலை வழங்குவதாகவும் பெண் தொழிலாளர்கள் நாளொன்றுக்கு கட்டாயமாக 18 கிலோகிராம் தேயிலை கொழுந்துகள் பறிக்க வேண்டும் என்றும் அதற்கு குறைவாக தேயிலை கொழுந்துகள் பறிக்கும் பட்சத்தில் அவர்களுக்கு அரை நாள் சம்பளம் வழங்கப்பட்டுவருதாகவும் தொழிலாளர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

'தேயிலை மலைகள் தோட்ட நிர்வாகத்தால் பராமரிக்காமல், காடாக்கப்பட்டு வருகின்றது. தேயிலை மலைகளில் கொழுந்து பறிக்க நுழைந்தவுடன், அட்டைக்கடிக்கு ஆளாகின்றோம். அட்டை கடிப்பதிலிருந்து தொழிலாளர்களை பாதுகாப்பதற்கு, ஒரு வகை மருந்தை தோட்ட நிர்வாகம் வழங்கியது. ஆனால், இந்த மருந்தை பூசிய பின்னர் கால்களில் புண் ஏற்படுகின்றது.

இதனால் சிலர் வைத்தியசாலைகளில் தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனர்' என்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் தெரிவித்தனர்.

'5 ஏக்கர் நிலப்பரப்பில் காணப்பட்ட தேயிலைச் செடிகளை பிடுங்கி எறிந்துவிட்டு கருப்பந்தேயிலை மரச் செடிகளை, தோட்ட நிர்வாகம் நாட்டி வருகின்றது. இவ்வாறான தோட்ட நிர்வாகத்தின் செயற்பாடுகளுக்கு எதிராக தோட்ட கம்பனிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும். மலையக தொழிற்சங்க தலைவர்களும் மலையக அரசியல் தலைவர்களும் இதற்கு நிரந்தர தீர்வை பெற்றுத் தர வேண்டும்' என்றும் தோட்ட மக்கள் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .