2026 ஏப்ரல் 13, திங்கட்கிழமை

ஹட்டன் மலசலகூட விவகார 3 பிரச்சினைக்கு விரைவில் தீர்வு

Kogilavani   / 2016 பெப்ரவரி 01 , மு.ப. 08:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

செ.தி.பெருமாள்

ஹட்டன் நகரின் பிரதான பஸ் நிலையத்துக்கு அருகிலுள்ள பொது மலசலகூடத்தை  குத்தகைக்கு எடுத்து நடத்தி வரும் நபரின் குத்தகையை இரத்து செய்து, மற்றொரு நபருக்கு குத்தகைக்கு விட நடவடிக்கை எடுத்துள்ளதாக ஹட்டன் -டிக்கோயா நகரசபை செயலாளர் என்.பிரியதர்ஷினி தெரிவித்துள்ளார்.

பொது மலசல கூடத்துக்கு, பொதுமக்கள் செலுத்த வேண்டிய தொகையை குறிப்பிட்டு பதாதை ஒன்றை அங்கு காட்சிப்படுத்த உள்ளதாகவும் அவர் கூறினார்.

மேற்படி மலசல கூடத்துக்கு செல்லும் பொதுமக்களிடம் அதிகளவு கட்டணம் வசூலிக்கப்படுவதாக முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. இது தொடர்பில் விளக்கமளிக்கும் போதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.

ஹட்டன்- டிக்கோயா  நகரசபையினால், அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ள இந்த மலசல கூடத்தை, தனி நபர் ஒருவர் விலைமனு கோரி பிரத்தியோகமாக நடத்தி வருகின்றார்.

எனினும், நகர நபையின் நியதிக்கு மாறாக இவர், பொதுமக்களிடமிருந்து 20 தொடக்கம் 25 ரூபாய் வரை கட்டணமாக வசூலித்து வருகின்றார்.

வெளிநாட்டு சுற்றுலா பயணிகளிடம் இதைவிட அதிகளவு பணம் அறவிடப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .