R.Maheshwary / 2022 ஏப்ரல் 19 , மு.ப. 11:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
சிபெட்கோ நிறுவனத்தால் நேற்று (18) இரவு எரிபொருள்களின் விலை அதிகரிக்கப்பட்ட நிலையில், ஹட்டனிலிருந்து தினமும் சேவையில் ஈடுபடும் தூர மற்றும் குறுகிய இடங்களுக்கான பஸ் சேவைகள் போக்குவரத்திலிருந்து விலகியுள்ளதால் ஹட்டன் பஸ் தரிப்பிடத்தில் அமைதியின்மை ஏற்பட்டது.
தனியார் மற்றும் இ.போ.ச பஸ்கள் இவ்வாறு போக்குவரத்து சேவைகளிலிருந்து விலகியுள்ளன.
இதனால் கொழும்பு, கண்டி உள்ளிட்ட பல இடங்களுக்கு தொழில்களுக்கு செல்வோரும் ஏனைய தேவைகளுக்கு செய்வோரும் பஸ் தரிப்பிடத்தில் அதிகாலை தொடக்கம் காத்திருந்தனர்.
எனினும் எந்தவொரு பஸ்களும் சேவையில் ஈடுபடாத நிலையில், சேவையில் ஈடுபட்ட ஒரு சில இ.போ.ச மற்றும் தனியார் பஸ்களும் போக்குவரத்தில் ஈடுபடாத வகையில் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டவர்களால் அச்சுறுத்தப்பட்டனர்.
இதன் காரணமாக தாம் போக்குவரத்திலிருந்து விலகியிருப்பதாக இ.போ.ச பஸ் சாரதிகள் தெரிவித்தனர்.
7 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
7 hours ago