2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

ஹட்டனில் எகிறும் ஓட்டோ கட்டணங்கள்

R.Maheshwary   / 2022 செப்டெம்பர் 20 , பி.ப. 03:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுதத்.எச்.எம்.ஹேவா

ஹட்டன் நகரிலிருந்து வாடகைக்கு அமர்த்திச் செல்லப்படும் ஓட்டோக்கள் அதிகமான கட்டண வசூலிப்பை முன்னெடுப்பதாக பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.

இதில் சில ஓட்டோ சாரதிகள், 2 கிலோமீற்றர் பயணிப்பதற்கு 400 ரூபாவை அறவிடுவதாகவும் ஒரு கிலோமீற்றர் பயணிக்க 250 ரூபாவை அறவிடுவதாகவும் தெரிவிக்கின்றனர்.

அதேப்போல் இரவு நேரங்களில் வாடகைக்கு அமர்த்தப்படும் சில ஓட்டோக்கள் 2 கிலோமீற்றர் தூரம் செல்ல ஆயிரம் ரூபாய் வரை அறிவிடுவதாகவும் தெரிவிக்கின்றனர்.

எனினும் ஹட்டன் பிரதேசத்திலுள்ள பல வீதிகள் பயணிக்க முடியாத வகையில் சேதமடைந்துள்ள உள்ளமை என்பவற்றுடன்  வாகன உதிரிப் பாகங்களுக்கான தட்டுபாடு, விலை அதிகரிப்பு, ஒட்டோக்களை புதுப்பிக்க அதிக கட்டணம் அறவிடுகின்றமை போன்ற காரணங்களே தாம் ஓட்டோ கட்டணங்களை அதிகரிக்க காரணம் என்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X