2026 ஜனவரி 19, திங்கட்கிழமை

ஹட்டன், கொட்டகலையில் இன்றும் எரிபொருளுக்கு வரிசை

R.Maheshwary   / 2022 மார்ச் 28 , பி.ப. 01:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரஞ்சித் ராஜபக்ஸ

ஹட்டன் மற்றும் கொட்டகலை ஆகிய பிரதேசங்களிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு இன்று (28) எரிபொருள் கிடைக்கவில்லை என எரிபொருள் நிரப்பு நிலைய பணியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

26ஆம் திகதி விநியோகிக்கப்பட்ட எரிபொருளே நேற்று (27) நள்ளிரவு வரை வாகனங்களுக்கு விநியோகிக்கப்பட்டதென, எரிபொருள் நிரப்பு நிலைய பணியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

எனவே குறித்த எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு போதியளவு எரிபொருள் கிடைக்காமையினால், இன்றும் அங்கு வாகன வரிசைகள் பல மீற்றர் தூரங்களுக்கு காணப்பட்டன.

எனினம் ஹட்டன், கொட்டகலை ஆகிய நகரங்களிலுள்ள சிபெட்கோ எரிபொருள் நிரப்பு நிலையங்களில்  வாகனங்களுக்கான சுப்பர் டீசல் எவ்வித மட்டுபாடுகளும் இன்றி விநியோகிக்கப்பட்டன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X