2026 ஏப்ரல் 16, வியாழக்கிழமை

ஹரினின் வானை காணவில்லை

Sudharshini   / 2016 ஜனவரி 20 , பி.ப. 12:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

தொலைத்தொடர்புகள் மற்றும் டிஜிட்டல் உட்கட்டமைப்பு அமைச்சர் ஹரின் பெர்ணோன்டவுக்கு உரித்தான வான் ஒன்று, கடந்த 17ஆம் திகதியிலிருந்து காணவில்லை என பதுளை பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

பதுளை - மஹியங்கனை வீதி, கய்லகொட சந்திக்கு அருகிலுள்ள அவரது அலுவலகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டவுன்ஸ் லோட்டோ ரக வானே, கடந்த 17ஆம் திகதி முதல் காணாமல் போயுள்ளதாக அமைச்சரின் உதவியாளர் ஒருவர் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

மேற்படி அலுவலகத்துக்கு முன்னால் கடந்த 17ஆம் திகதி இவ்வான் தரித்து நின்றதாகவும் அன்றைய தினம் இரவு 8 மணிமுதலே அது காணாமல் போயுள்ளதாகவும் முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த இரு தினங்களாக வானை தேடும் முயற்சில் ஈடுபட்டிருந்ததால் உடனடியாக பொலிஸில் முறைப்பாடு செய்யவில்லை என்றும் தேடியும் கிடைக்காத பட்சத்திலேயே அது குறித்து பொலிஸில் முறைப்பாடு செய்ததாகவும் அமைச்சின் உதவியாளர் குறிப்பிட்டுள்ளார். அவரது முறைப்பாட்டுக்கு அமைய, பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .