S. Shivany / 2021 மார்ச் 01 , பி.ப. 05:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
பண்டாரவளை- ஹீல்ஒயா பகுதியை சேர்ந்த 68 வயதுடைய ஆண் ஒருவர் மாரடைப்பு காரணமாக தியத்தலாவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோது சிகிச்சை பலனின்றி நேற்றிரவு (28) உயிரிழந்தார்.
உயிரிழந்த நபருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தியத்தலாவை வைத்தியசாலை அதிகாரி தெரிவித்தார்.
இதனையடுத்து இன்றைய தினம் (01)இவரது பூதவுடல் பிரதேச சுகாதார அதிகாரியின் பணிப்புரையின்படி, பண்டாரவளை நகர பொது மயானத்தில் தகனம் செய்யப்பட்டுள்ளது.
இதனையடுத்து குறித்த நபரோடு நெருங்கிய தொடர்பை பேணிய குடும்ப உறுப்பினர்கள் ஐந்து பேரும் தியத்தலாவை வைத்தியசாலை சுகாதார உத்தியோகஸ்தர்கள் ஐந்து பேரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என, சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.
20 Dec 2025
20 Dec 2025
20 Dec 2025
20 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 Dec 2025
20 Dec 2025
20 Dec 2025
20 Dec 2025