2025 ஓகஸ்ட் 16, சனிக்கிழமை

ஹோட்டலில் தங்கியிருந்த மூவர் கைது

R.Maheshwary   / 2022 ஒக்டோபர் 19 , பி.ப. 03:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஷேன் செனவிரத்ன

இரவு நேரத்தில் ஏதேனும் ஒரு குற்றச் செயலில் ஈடுபட்டதற்காக, அலதெனிய பிரதேச ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்த மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன் சந்தேகநபர்களிடம் இருந்து 7 கிராம் ​ஹெரோய்னும் கைப்பற்றப்பட்டுள்ளதாக அலதெனிய பொலிஸார் தெரிவித்தனர்.

கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர்கள் கொழும்பு, தெல்தெனிய மற்றும் யஹலதென்ன பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் என்றும் சந்தேகநபர்கள் மூவரும் ஏதேனும் ஒரு குற்றச்செயலில் ஈடுபடவே ஹோட்டல் அறையில் தங்கியிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

சந்தேகநபர்களை கண்டி நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .