2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

கொழும்புக்கு எரிபொருள் விநியோகம் ஆரம்பம்

Freelancer   / 2022 மார்ச் 17 , பி.ப. 04:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு தேவையான எரிபொருள் கைருப்புக்களை விநியோகிப்பதற்காக பெற்றோல் மற்றும் டீசல் கொண்ட எரிபொருள் பவுசர்கள் ஏற்கெனவே அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சர் காமினி லொக்குகே, இன்று (17) தெரிவித்தார்.  

விநியோகத்தில் ஏற்பட்ட தாமதம் காரணமாக பல பகுதிகளில் நீண்ட வரிசைகள் தொடர்வதாகக் குறிப்பிட்ட அவர், அனைத்து பௌசர்களும் செவ்வாய்க்கிழமை முதல் செயற்பாடுகளை இடைநிறுத்தியிருந்துடன், இன்று (17) முதல் அந்த பவுசர்கள் மீண்டும் செயற்படத் தொடங்கியுள்ளன என்று குறிப்பிட்டார்.

இதன்மூலம் கொழும்பிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு எரிபொருள் விநியோகம் இன்று பிற்பகலுக்குள் நிறைவடையும் என அமைச்சர் தெரிவித்தார்.

கொழும்பிலுள்ள ஒவ்வொரு எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கும் தலா ஒரு பவுசர் டீசல் மற்றும் பெற்றோலை வழங்குமாறு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

மேலும், கொழும்பு துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள டீசல்  கப்பலையும் இன்று (18) விடுவிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .