Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 03, சனிக்கிழமை
Editorial / 2020 ஓகஸ்ட் 25 , மு.ப. 11:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
என். ஜெயரட்ணம்
இலங்கையின் இறப்பர் ஆராய்ச்சி நிலையம் அமைந்துள்ள அகலவத்தை டார்டன்பீல்ட் தோட்ட கணபதி அறநெறி பாடசாலையின், "பாடசாலைகீத இறுவெட்டு வெளியீடு விழா" எதிர் வரும் 30ஆம் திகதி காலை 9 மணியளவியல் தோட்ட முத்துமாரியம்மன் ஆலய மண்டபத்தில் வெகு விமரிசையாக நடைபெறவுள்ளது.
இதன்போது அறநெறி பாடசாலை மாணவ-மாணவிகளின் தமிழ் பாரம்பரியங்களை பறைசாற்றும் விதத்திலான கலை, கலாசார நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளதுடன், களுத்துறை மாவட்டத்தில் 10 வருடங்களுக்கு மேல் பணியாற்றிய ஆசிரிய-ஆசிரியைகள் மற்றும் பிரதேசத்தின் தமிழ்ச் சமூகத்தின் வளர்ச்சிக்கு பல்வேறு வகைகளில் அயராது பணியாற்றிவரும் தன்னார்வலர்கள் மற்றும் நலன்விரும்பிகளும் விருது வழங்கி கௌரவிக்கப்படவுள்ளனர்.
அகலவத்தை கணபதி அறநெறி பாடசாலை விழா ஏற்பாடு குழுத் தலைமையில் நடைப்பெறும் இந்நிகழ்வில், பிரபல அரசியல்வாதிகள், பிரதேச செயலக அதிகாரிகள் உள்ளிட்ட பிரமுகர்கள் பலரும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
37 minute ago
42 minute ago
3 hours ago
3 hours ago