Editorial / 2021 டிசெம்பர் 20 , மு.ப. 11:24 - 0 - {{hitsCtrl.values.hits}}

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் பயன்படுத்திய ஜீப் வண்டி, மஹரகமவைச் சேர்ந்த ஒருவர் தற்போது பயன்படுத்தி வருகின்றார்.
மஹரகமவைச் சேர்ந்த கபில புலத்கே (வயது 50) என்பவதே தற்போது பயன்படுத்தி வருகின்றார் என்றும் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
1942 ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்ட இந்த ஜீப், இரண்டாம் உலக போரின் போது உயர் அதிகாரிகளால் பயன்படுத்தப்பட்டது. இந்தியாவிலிருந்து இலங்கைக்குக் கொண்டுவரப்பட்ட இந்த ஜீப், யாழ்ப்பாணம் பருத்தித்துறையில் வைத்து அதன் உரிமையாளரிடமிருந்து பயங்கரவாதிகளால் அபகரிக்கப்பட்டுள்ளது.
2009 ஆம் ஆண்டு முதல் 2018ஆம் ஆண்டு வரையிலும் அந்த ஜீப் வண்டி, கராஜில் இருந்துள்ளது. அந்த வாகனத்தின் மூன்றாவது உரிமையாளரே, சகல ஆவணங்களை காண்பித்து, ஜீப் வண்டியை பெற்று, அதனை மஹரகமவில் உள்ள கராஜில் வைத்து திருத்தியுள்ளார்.
இந்த வாகனத்தை தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் மற்றும் அவருடைய நெருங்கிய பாதுகாவலர்கள், மூத்த தலைவர்கள் பயன்படுத்தியுள்ளனர் என்றும் தகவல்கள் கிடைத்துள்ளன.

47 minute ago
14 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
47 minute ago
14 Apr 2026