2025 நவம்பர் 06, வியாழக்கிழமை

மீன் விற்பனை சந்தைகளுக்கு அமைச்சர்கள் திடீர் விஜயம்

Editorial   / 2020 செப்டெம்பர் 03 , மு.ப. 11:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.இஸட்.ஷாஜஹான்

அமைச்சர் பந்துல குணவர்தன, இராஜாங்க அமைச்சர்களான லசந்த அழகிய வண்ண, நிமல்லான்ஸா ஆகியோர், இன்று (03) அதிகாலை 4 மணியளவில், நீர்கொழும்பு, பிட்டிபனையில் அமைந்துள்ள மீன் விற்பனை சந்தைகளுக்கு திடீர் விஜயம் மேற்கொண்டனர்.

நீர்கொழும்பு தெற்கு மீனவ கூட்டுறவு சங்கத்தின் கீழ் இயங்கும்,  இரண்டு மீன் விற்பனை  சந்தைகளை இவர்கள் மேற்பார்வை செய்தனர்.

சங்கத்தைச் சேர்ந்த மீனவர்களால் பிடிக்கப்படும் மீன்களையும் நாட்டின் சில பகுதிகளிலிருந்து  இங்கு கொண்டு வரப்படும்  மீன்களையும் குறைந்த விலைக்கு பொது மக்களுக்கு விற்பனை செய்வதற்கான வழிவகைகளை கண்டறிவதற்காக இந்த  விஜயம் மேற்கொள்ளப்பட்டதாக அமைச்சர் பந்துல குணவர்தன  ஊடகங்களுக்கு தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X