2025 செப்டெம்பர் 14, ஞாயிற்றுக்கிழமை

வத்தளை கடலில் இரு மாணவர்கள் பலி

Freelancer   / 2021 டிசெம்பர் 13 , பி.ப. 03:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

வத்தளை - பிரித்திபுர கடற்கரையில் குளித்துக்கொண்டு இருந்த போது நீரில் அடித்துச்செல்லப்பட்ட இரு மாணவர்கள் உயிரிழந்துள்ளனர்.

இவர்களது உடல்களை கடற்படையினர் மீட்டுள்ளனர்.

பாடசாலை மாணவர்கள் நால்வர் கடலில் நீராடிக் கொண்டிருந்த போது அவர்களில் இருவர் கடலில் அடித்துச் செல்லப்பட்டு காணாமல் போயுள்ளனர்.

இதையடுத்து, கடற்படை வீரர்கள் மற்றும் பிரதேசவாசிகள் இணைந்து மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையில் இரு மாணவர்களின் சடலங்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

மஹர குமார வித்தியாலயத்தைச் சேர்ந்த தரம் 10இல் கல்வி பயிலும் ருவிந்த புன்சரா (15)  சஞ்சித சதகெலும் (15) என்ற இரு மாணவர்களே உயிரிழந்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .