2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

வீட்டின் குளியலறையில் கசிப்பு உற்பத்தி

Editorial   / 2020 ஓகஸ்ட் 27 , பி.ப. 05:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

என். ஜெயரட்ணம் 

அகலவத்தை பொலிஸ் நிலைய  பொறுப்பதிகாரி,  பிரதான  பொலிஸ் பரிசோதகர் டீ.எம். விஜேரத்னவுக்கு  கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து, பொலிஸார்  மேற்கொண்ட சுற்றிவளைப்பில், நீண்டகாலமாக வீடொன்றின் குளியலறையில்  இயங்கி வந்த  கசிப்பு உற்பத்தி நிலையம் ஒன்றை முற்றுகையிட்டுள்ளதுடன்,  கசிப்பு உற்பத்திக்கு பயன்படுத்தப்பட்ட உபகரணங்கள் சிலவற்றையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

அகலவத்தை, பொலேகொடை, குருந்துவத்தை பகுதியில் அமைந்துள்ள வீடொன்றிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில், கைது செய்யப்பட்ட  சந்தேக நபரை,  மத்துகமை  நீதிமன்றத்தில் ஆஜர் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X