2025 டிசெம்பர் 19, வெள்ளிக்கிழமை

யாழ். நெல்லியடி மத்திய மகாவித்தியாலய புனரமைப்பிற்கு ரூ.3 மில்லியன் நிதி ஒதுக்கீடு

Menaka Mookandi   / 2011 ஜூலை 07 , மு.ப. 05:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

யாழ். நெல்லியடி மத்திய மகாவித்தியாலய கட்டிடங்களை புனரமைப்பதற்கான வேலைத்திட்டங்கள் விரைவில் முன்னெடுக்கப்படும் என வடமாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜி.ஏ.சந்திரசிறி தெரிவித்துள்ளார்.

வடமாகாணத்தின் கல்வி வளர்ச்சி மீது எனக்கு அதிக ஆர்வம் உண்டு. இதனால் இப்பாடசாலையில் புனரமைக்கப்படாத கட்டிடத்தை எதிர்வரும் ஓகஸ்ட் மாதத்திற்கு புனரமைப்புச் செய்ய 3 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்நிதிமூலம் இம்மகாவித்தியாலயத்துக்குரிய கலையரங்கத்தினை புனரமைக்க கல்வியமைச்சின் செயலாளருக்கு பணிப்புரை வழங்கப்பட்டுள்ளது. இவற்றினைப் புனரமைப்பதற்கு நிதி மதிப்பீடு ஒன்றைச் ஒழுங்கு செய்து தருமாறு பாடசாலைச் சமூகத்தை அவர் கேட்டுக் கொண்டார்.

அத்தோடு இப்பாடசாலையில் கல்வி பயிலும் மாணவர்களிடமிருந்து சிறந்த கல்விப் பெறுபேற்றை எதிர்பார்ப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X