2025 டிசெம்பர் 20, சனிக்கிழமை

உப-தபால் அதிபர்கள் தொழிற்சங்கத்தின் 42 ஆவது பொதுக்கூட்டம்

Kanagaraj   / 2013 மே 18 , பி.ப. 03:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

அகில இலங்கை தமிழ் பேசும் உப-தபால் அதிபர்கள் தொழிற்சங்கம்  நடாத்தும் 42 ஆவது வருடாந்த பொதுக்கூட்டம்  எதிர்வரும் சனிக்கிழமை 25 ஆம் திகதி யாழ்ப்பாண தபாலகத்திற்கு முன்பாக தலைவர் எஸ்.சுப்பிரமணியம் அவர்களின் தலைமையில் நடைபெவுள்ளது.

அன்றைய நிகழ்வின் பிரதம அதிதியாக வட மாகாண பிரதி அஞ்சல் மா அதிபதி ஞா,இரட்ணசிங்கம் கலந்து சிறப்பிக்கவுள்ளார்.

இந் கூட்டத்தின் போது நிரந்தரமாக்கப்படாத உப-தபால் அதிபர்களின் நிரத்தர நியமனம் பற்றி ஆராயப்படவுள்ளதோடு, புதிய நிருவாகசபைத்தெரிவும்,அங்கத்தவர்கள் இணைத்து கொள்ளளும் இடம்பெறவுள்ளது.

இக் கூட்டத்திற்கான உத்தியோக பூர்வ கடிதம் வட கிழக்கு மாகாணம் உட்பட சகல தமிழ் மொழியிலான உப தபாலகங்களுக்கும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக உப தபால் அதிபர்கள் தொழிற்சங்கத்தின் தலைவர் எஸ்.சுப்பிரமணியம் தெரிவித்தார்.

மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில், கலந்து கொள்ளும் உப-தபால் அதிபர்களுக்கான போக்கு வரத்து வசதி,உணவு மற்றும் தூர இடங்களில் இருந்து செல்பவர்களுக்கான தங்குமிட வசதிகளும் இலவசமாக செய்யப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X