2025 ஓகஸ்ட் 18, திங்கட்கிழமை

யாழ். பல்கலையின் 13 மாணவர்களுக்கு வகுப்புத்தடை

Menaka Mookandi   / 2013 செப்டெம்பர் 13 , மு.ப. 11:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ். பல்கலைக்கழக கலைப்பீட மாணவர்கள் 13 பேருக்கு இன்று வெள்ளிக்கிழமை முதல் இரண்டு வருட காலத்திற்கு வகுப்புத்தடை விதிக்கப்பட்டது.

கலைப்பீடத்தில் கல்வி பயிலும் இரண்டு மாணவ குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட கைகலப்பினைத் தொடர்ந்து நான்காம் வருட மாணவர்கள் ஆறு பேர், மூன்றாம் வருட மாணவர்கள் ஏழு பேர் உள்ளடங்கலாக 13 மாணவர்களுக்கு யாழ். பல்கலைக்கழக ஒழுக்காற்றுப் பிரிவினரால் வகுப்புத்தடை விதிக்கப்பட்டுள்ளது.

இம்மாணவர்கள் அனைவரும் விடுதி உட்பட கற்றல், பல்கலைக்கழக செயற்பாடுகளில் ஈடுபடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. 

இதனையடுத்து தடை விதிக்கப்பட்ட மாணவர்கள் அனைவரையும் மீள பல்கலைக்கழக வளாகத்திலுள் சேர்க்குமாறு வலுயுறுத்தி கலைப்பீட மாணவர்கள் கால வரையற்ற பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X