2025 ஓகஸ்ட் 16, சனிக்கிழமை

சட்டவிரோத மின் பாவனையாளர்களிடம் 12 மில்லியன் ரூபா வசூல்

Super User   / 2013 செப்டெம்பர் 24 , மு.ப. 07:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுமித்தி தங்கராசா

யாழ். மாவட்டத்தில் சட்டவிரோத மின்சாரம் பெற்ற 242 பேருக்கு எதிராக நடவடிக்கை மேற்கொண்டதில்  12,985,947 ரூபா வசூலிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட மின்சார சபை பொறியியலாளர் சங்கரப்பிள்ளை ஞானகணேசன் தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

"யாழ். மாவட்டத்தில் 2013 ஜனவரி மாதம் முதல் ஓகஸ்ட் மாதம் வரையான காலப் பகுதியில், பரிசோதனை மேற்கொண்ட போது, மீற்றரில்; திருத்தங்கள் மேற்கொண்டவர்களும் மின்சார கம்பிகளில் கொளுக்கி மூலம் சட்ட விரோத மின்சாரம் பெற்றவர்களுக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

யாழில் உள்ள ஐந்து நீதிமன்றங்களில் இவர்கள் ஆஜர்ப்படுத்தப்பட்டபோது நீதிவான்களினால் அபராதம் விதிக்கப்பட்டது. கடந்த எட்டு மாத கால பகுதியில் மின்சார சபையின் அதிரடி சோதனை நடவடிக்கையினால் மொத்தமாக 242 பேர் கைப்பற்றப்பட்டனர்.  இவர்களிடமிருந்தே தண்டமாக 12,985,947 ரூபா வசூலிக்கப்பட்டுள்ளது" என்றார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .