2025 டிசெம்பர் 19, வெள்ளிக்கிழமை

இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் 146ஆவது ஆண்டு நிறைவினை முன்னிட்டு யாழில் நிகழ்வு

Super User   / 2012 செப்டெம்பர் 04 , மு.ப. 09:20 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ரஜனி)


இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் 146ஆவது ஆண்டு நிறைவு வைபவம் இன்று செவ்வாய்கிழமை யாழ். தலைமை பொலிஸ் நிலையத்தில் நடைபெற்றது.

யாழ். துலைமை பொலிஸ் நிலையத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில், பொலிஸ் அணி வகுப்பு மரியாதையினை யாழ். மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் ஏற்றுக் கொண்டார்.

அதனைத் தொடர்ந்து, தேசிய கொடி ஏற்றல் நிகழ்வு இடம்பெற்றது. இந் நிகழ்வில் யாழ். மாவட்ட பாடசாலை அதிபர்கள் மற்றும் கிராம சேவை அலுவலர்கள் என பலர் கலந்துகொண்டனர்.

அதனைத் தொடர்ந்து, காரைநகர் கசூரினா கடற்கரையில் இடம்பெற்ற நீச்சல் போட்டியில் வெற்றி பெற்ற பாடசாலை மாணவர்களுக்கான சான்றிதழ் வழங்கப்பட்டன.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X