2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

தெல்லிப்பளையில் 19 பேர் கைது

Super User   / 2011 ஜூன் 09 , பி.ப. 06:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கிரிசன்)

அண்மையில் மீளக்குடியேற அனுமதிக்கப்பட்ட வலி வடக்கு தெல்லிப்பளை பொலிஸ் பிரிவில் இன்று காலை மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையொன்றின்போது 19 பேர் கைது செய்யப்பட்டதாக தெல்லிப்பளை  பொலிஸார் தெரிவித்தனர்.

களவு, கொள்ளை போன்ற குற்றச்செயல் தொடர்பாகவே இவர்கள் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டனர். இவர்களில் 3 மூவர் ஏற்கெனவே நீதிமன்றங்களினால் பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்டு தேடப்பட்டு வந்தவர்களாவர் எனவும் தெல்லிப்பளை பொலிஸார் தெரிவித்தனர்.

மாவிட்டபுரம், கொள்ளன்கலட்டி, செல்வாபுரம், வித்தகபுரம, பன்னாலை, மாவைகலட்டி ஆகிய பகுதிகளில் இத்தேடுதல்கள் இடம்பெற்றன.  கைது செய்யப்பட்டவர்கள் இப்பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் அல்லர் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

தெல்லிப்பளை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி லலித் வீரசிங்க, பொலிஸ் பரிசோதகர் வடுகொட, எஸ்.திசாநாயக்க, எஸ்.ஐ. சகான் ஆகியோர் அடங்கிய பொலிஸ் குழுவொன்று இத்தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டது.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X