2025 டிசெம்பர் 19, வெள்ளிக்கிழமை

யாழ். கோட்டையின் புனரமைப்பு பணிகள் 2013இல் நிறைவுறும்

Menaka Mookandi   / 2012 நவம்பர் 26 , மு.ப. 11:43 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எஸ்.கே.பிரசாத்)


நெதர்லாந்து மற்றும் இலங்கை அரசாங்கத்தின் நிதியுதவியுடன் புனரமைக்கப்பட்டு வரும் யாழ் ஒல்லாந்தர் காலத்து கோட்டையின் புனரமைப்பு பணிகள் எதிர்வரும் 2013ஆம் ஆண்டு இறுதிப் பகுதியில் நிறைவடையும் என்று தொல்லியல் திணைக்களத்தின் வடபிராந்திய உதவிப்பணிப்பாளர் சோமதிலக தெரிவித்துள்ளார்.

இந்த கோட்டையின் புனரமைப்புப் பணிகள் 2010ஆம் ஆண்டு தொடக்கம் இடம்பெற்று வருகின்றன. இந்தப்பணிக்கு இலங்கை அரசாங்கம் பூரண ஒத்துழைப்பு வழங்கி வருவதாவும் 2013ஆம் ஆண்டு அந்தப் புனரமைப்பு பணிகள் நிறைவடையும் என்று எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அத்துடன் 104 மில்லியன் ரூபா செலவில் இந்த புனரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் இதுவரையான 80 வீதமான புனரமைப்பு பணிகள் நிறைவுபெற்றுள்ளதாகவும் அதற்கு 87 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

இந்த கோட்டை புனரமைப்புக்காக பகுதி பகுதியாக கிடைக்கின்ற நிதியின் மூலமே புனரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றது. இந்த பணிக்காக  இரு நாடுகளினதும் அரசாங்கங்களினாலும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிதி போதாமை காரணமாக மேலதிகமாக 50 மில்லியன் ரூபா கோரியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X