2025 டிசெம்பர் 19, வெள்ளிக்கிழமை

குடும்பப் பிணக்குகள் காரணமாக யாழில் நாளொன்றுக்கு 30 முறைப்பாடுகள் பதிவு

Suganthini Ratnam   / 2011 டிசெம்பர் 15 , மு.ப. 05:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

யாழ். மாவட்டத்தில் குடும்பப் பிரச்சினைகள் காரணமாக நாளொன்றுக்கு 30க்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் கிடைப்பதாக யாழ். பொலிஸ் நிலையத் தலைமைப் பொறுப்பதிகாரி சமன் சிகேரா தெரிவித்துள்ளார்.

யாழ். பொலிஸ் நிலையத்தில் இன்று வியாழக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர்களுடனான சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறினார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

அதிகரித்துச் செல்லும் குடும்பப் பிரச்சினைகள்; காரணமாக அண்மைக்காலத்திலிருந்து அதிகளவானோர் பொலிஸ் நிலையங்களை நாடி வருகின்றனர். குடும்பப் பிரச்சினைகள்  காரணமாக அதிகாலை வேளையிலேயே பெண்கள் பொலிஸ் நிலையங்களுக்கு வருகின்றனர்.

காணிப் பிரச்சினைகளே கூடுதலாகக் காணப்படுவதுடன்,  தங்களது காணியிலிருந்து எழும்பமாட்டோமென உறவினர்கள் அடம்பிடிப்பதாக எங்களுக்கு முறைப்பாடுகள் கிடைக்கின்றன. அத்துடன்,  சீட்டுப் போட்டு அதில் உரியவருக்கு பணம் கொடுக்கத் தவறியது தொடர்பாகவும்  அதிகமான முறைப்பாடுகள் யாழ். பொலிஸ் நிலையங்களில் பதிவு செய்யப்படுகின்றன.

இவற்றில் பேசித் தீர்க்கக்கூடிய பிரச்சினைகளை நாங்கள் கேட்டறிந்து அப்பிரச்சினைகளை தீர்த்துவைக்கின்றோம்' என்றார்.


  Comments - 0

  • neethan Thursday, 15 December 2011 04:23 PM

    யுத்த சூழ்நிலை மாறினாலும், சமூக பண்பாட்டு விழுமியங்கள் கீழ் நிலை அடைவதை,சிவில் சமுக புத்தி ஜீவிகளும், சமூக, சமய ஆர்வலர்களும் அனுமதிக்காது. இது விடயத்தில் கூடிய கவனம் செலுத்த வேண்டும்.

    Reply : 0       0

    panam Friday, 16 December 2011 03:29 AM

    சீட்டு கட்டும் முறையை தடை செயும் சட்டம் அவசியம்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X