2025 டிசெம்பர் 19, வெள்ளிக்கிழமை

கிளிநொச்சியில் 5ஆம் திகதி மனித உரிமைகள் ஆணைக்குழுவின் நடமாடும் சேவை

Super User   / 2012 நவம்பர் 29 , பி.ப. 03:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

(சுமித்தி)

கிளிநொச்சி மாவட்டத்தில் காணாமல் போனோர் குறித்த 80 விண்ணப்பங்களுடன் 18 முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளது என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். பிராந்திய இணைப்பாளர் த.கனகராஜ் இன்று தெரிவித்தார்.

கிளிநொச்சி மாவட்டத்தில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தனது சேவையை விஸ்தரித்து 6 வாரங்களில் காணி மற்றும் ஏனைய விடயங்கள் குறித்து 18 முறைப்பாடுகளும், காணாமல் போனோர் குறித்த 80 விண்ணப்பங்களும் கிடைக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

இதேவேளை, கிளிநொச்சி மாவட்டத்தில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழவினால் நடமாடும் சேவை ஒன்றினை எதிர்வரும் 5 ஆம் திகதி நடாத்த ஏற்பாடு செய்யப்பட்டடுள்ளதாக அவர் கூறினார்.

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைமைக் காரியாலயமும், யாழ். பிராந்திய காரியாலயமும் இந்த நடமாடும் சேவையினை நடாத்த தீர்மானித்துள்ளதாக அவர் கூறினார்.

மேலும், எதிர்வரும் 5ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ள நடமாடும் சேவை பூநகரி பிரதேச செயலகத்திலும் 6ஆம் திகதி பச்சிளைப்பள்ளி பிரதேச செயலகத்திலும் 7ஆம் திகதி கண்டாவளை பிரதேச செயலகத்திலும் நடைபெறவுள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X