2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

யாழில் 6 மாதங்களில் 62பேர் தற்கொலை

Menaka Mookandi   / 2011 ஜூன் 06 , மு.ப. 05:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

யாழ். குடாநாட்டில் இந்த வருடம் ஜனவரி மாதம் முதல் ஜூன் மாதம் வரை 62பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக யாழ்.போதனா வைத்தியசாலையின் புள்ளிவிபரத் தரவுகள் தெரிவிக்கின்றன.

அப்புள்ளி விபரத்தரவுகளின்படி நெருப்பில் தனக்குத் தானே தீயிட்டு தற்கொலை செய்தவர்களின் எண்ணிக்கை 21ஆகவும், தூக்கிட்டு தற்கொலை செய்தவர்கள் 18ஆகவும் நஞ்சருந்தி தற்கொலை செய்து கொண்டவர்கள் 8, நீரில் மூழ்கி மரணமானவர்கள் 15 பேரும் என பதிவாகியுள்ளது.

இந்த மரணங்களில் பெண்களின் வீதம் 75ஆகக் காணப்படுவதுடன் அவர்களில் பெரும்பாலானோர் இளவயது குடும்பப் பெண்களாகக் காணப்படுவதாக அப்புள்ளிவிபரத் தரவுகள் மேலும் தெரிவித்துள்ளன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X