Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 21, புதன்கிழமை
Super User / 2011 ஜூன் 13 , பி.ப. 01:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
வட மாகாணத்திலுள்ள புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளிகளின் மீள்ஒருங்கிணைப்பு நடவடிக்கைகளுக்காக பிரித்தானிய அரசு சுமார் 90 மில்லியன் ரூபாவை வழங்கவுள்ளதாக யாழ்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுட இலங்கைக்கான பிரித்தானிய உதவி உயர்ஸ்தானிகர் மார்க் கூடிங் அறிவித்துள்ளார்.
இந்த நிதி அரசாங்கத்தின் புனர்வாழ்வு மற்றும் மீள் ஒருங்கிணைப்பு பணிகளின் ஒரு பகுதியாக குடிவரவுக்கான சர்வதேச ஸ்தாபனத்தினால் மேற்கொள்ளப்படும் திட்டமொன்றுக்கு பயன்படுத்தப்படவுள்ளது.
இந்த விஜயத்தின் போது தெல்லிப்பளை புனர்வாழ்வு நிலையம் மற்றும் தெல்லிப்பளை, கொல்லகலட்டி பிரதேசத்தில் மீள்குடியேற்றப்பட்டுள்ள மக்களை இவர் சந்தித்ததுடன் யாழ். பாதுகாப்பு படைகளின் கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்க மற்றும் அரசியல் கட்சி பிரதிநிதிகளையும் சந்தித்தார்.
இதேவேளை, யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களிலுள்ள கண்ணிவெடி அகற்றல் நடவடிக்கைகளுக்காக 3,000,000 ஸ்ரேலிங் பவுண்களை வழங்கவுள்ளதாக பிரித்தானிய அண்மையில் அறிவித்தமை குறிப்பிடத்தக்கது.
ajan Tuesday, 14 June 2011 03:50 AM
நல்ல விடயம். அவர்களுக்கு பிரிட்டனின் நேரடியா வழங்கினால் மட்டுமே உதவி கிடைக்கும். இல்லாவிட்டால் யானை வாய்க்கு போன பொறி போல தான் லங்காவுக்கு.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
29 minute ago
44 minute ago
20 May 2025