Suganthini Ratnam / 2011 ஜூன் 03 , மு.ப. 03:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கவிசுகி)
இந்திய மீனவர்கள் வட இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபடுவதை முற்றாகத் தடைசெய்வதற்காக கடற்றொழில் அமைச்சினூடாக தமிழக முதல்வர் ஜெ.ஜெயலலிதாவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக வடமாகாண கடற்றொழில் கூட்டுறவுச் சங்கங்களின் சமாசத் தலைவர் எஸ்.தவரட்னம் இன்று தெரிவித்தார்.
அண்மைக்காலமாக வட கடற்பகுதியில் இலங்;கை மீனவர்களுடைய ஊடுருவல், கடல் நடமாட்டம், ஆழ்கடல் மீன்பிடி ஆகியவை அதிகரித்து காணப்படுகின்றன. இதனால் வட கடலிலுள்ள வளங்கள் குறைவடைந்து செல்கின்றன. அத்துடன் வட கடல் மீனவர்களும் பெரிதும் பாதிக்கப்பட்டு கடற்றொழிலிலில் ஈடுபட முடியாத இக்கட்டான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
கடந்த காலங்களில் இந்த்ப்ய, இலங்கை மீனவர் பிரச்சினை சார்ந்த பேச்சுவார்த்தைகளில் எந்தவித திருப்திகரமான பதிலும் கிடைக்கவில்லை. இதனாலேயே வடமாகாண கடற்றொழில் சமாசப் பிரதிநிதிகள் கடற்றொழில் அமைச்சினூடாக ஜெயலலிதாவை சந்திக்க முடிவெடுத்துள்ளதாகவும் அவர் கூறினார்.
6 hours ago
6 hours ago
6 hours ago
20 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
6 hours ago
6 hours ago
20 Dec 2025