2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

யாழ். பல்கலைக்கழக ஊடக வளங்கள் பயிற்சி மையத்திற்கு புதிய பணிப்பாளர் நியமனம்

Kogilavani   / 2011 ஜூன் 03 , மு.ப. 08:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

யாழ். பல்கலைக்கழக ஊடக வளங்கள் மற்றும் பயிற்சி மையத்தின் புதிய பணிப்பாளராக தே.தேவானந்த் நேற்று வியாழக்கிழமை நியமிக்கப்பட்டுள்ளார்.

கடந்த வருடம் யூன் மாதம் இந்நிறுவனத்தின் பணிப்பாளர் பதவியிலிருந்து பேராசிரியர் போ.பாலசுந்தரம் பிள்ளை விலகியதன் பின் வெற்றிடமாக இருந்த இப்பதவிக்கு இவ் வருடம் யூன் மாதத்திலிருந்து  தே.தேவானந்த் நியமிக்கப்பட்டுள்ளார்.

யாழ்.பல்கலைக்கழக பட்டதாரியான இவர் இதழியல் மற்றும் தொடர்பியல் துறையில் முதுமாணி பட்டம் பெற்றுள்ளார். கடந்த  வருடம் டென்மார்கிலுள்ள ஒல்போர்க் பல்கலைக்கழகத்தில் இலத்திரணியல் துறையில் குறுங்கால பயிற்சிகளை  பெற்றவர் என்பவது குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X