Suganthini Ratnam / 2011 ஜூன் 03 , மு.ப. 08:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கவிசுகி)
யாழ். நாவாந்துறைப் பகுதியில் பழுதடைந்த 81 கிலோ மாட்டிறைச்சியை விற்பனைக்கு வைத்திருந்த மாட்டிறைச்சிக் கடைக்காரர்கள் இருவருக்கு தலா 10,000 ரூபாய் தண்டப்பணம் விதித்து யாழ். மாவட்ட நீதிமன்ற நீதிபதி ஆனந்தராசா நேற்று தீர்ப்பளித்துள்ளார்.
யாழ். மாநகரசபை பொதுச்சுகாதார பரிசோதகர்கள் மேற்கொண்ட திடீர் பரிசோதனை நடவடிக்கையின்போது பாவனைக்குதவாத இறைச்சியை விற்பனைக்காக வைத்திருந்தார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் இறைச்சிக் கடைக்காரர்கள் இருவர் கைதுசெய்யப்பட்டு நேற்று வியாழக்கிழமை நீதிமன்றத்தில் ஆஐர்படுத்தப்பட்டனர்.
இவர்கள் இருவரும் தமது குற்றத்தை ஒப்புக்கொண்டதையடுத்து தண்டப்பணம் விதித்து தீர்பளித்த நீதிபதி, கைப்பற்றப்பட்ட இறைச்சியை அழிக்குமாறு யாழ். மாநகரசபை பொதுச்சுகாதார பரிசோதகர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.
6 hours ago
6 hours ago
6 hours ago
20 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
6 hours ago
6 hours ago
20 Dec 2025