Kogilavani / 2011 ஜூன் 03 , பி.ப. 02:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கவிசுகி)
யாழ். மாநாகர சபையின் மாதாந்த கூட்டங்களை யாழ். ஊடகவியலாளர்கள் பகிஷ்கரிக்க வேண்டும் என வட இலங்கை பத்திரிகையாளர் சங்கத்தலைவர் எஸ்.கதிர்காமத்தம்பி இன்று வெள்ளிக்கிழமை விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
அவ்வறிக்கையில் அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது,
யாழ்.மாநாகர சபையில் இடம்பெற்றதாக கருதப்படும் ஊழல் மற்றும் மோசடிகள் தொடர்பாக வெளியுலகிற்கு வெளிப்படுத்திய ஊடக நிறுவனங்களையும் ஊடகவியலாளர்களையும் தாக்கி அவர்களின் இருப்புக்கு அச்சுறுத்தல் விடுத்துவரும் நிலையில், ஊடகவியலாளர்கள் உண்மைக்கு உயிர் கொடுக்கவும் துணிந்த நிலையில் அவர்களுக்கு மறைமுகமாக விடுக்கப்படும் அச்சுறுத்தல்கள் நிறுத்தப்படவேண்டும்.
ஊடகவியலாளர்களுக்குரிய கௌரவம் கொடுக்கப்படாமல் அவர்களை அவமானப்படுத்தும் செயற்பாடுகளை யாழ்.மாநகர சபையில் இடம்பெற்று வருவதாக யாழ். ஊடகவியலாளர்கள் எம்மிடம் முறையிட்டள்ளனர். ஊடக தர்மத்திற்கு ஏற்ப செயற்படும் ஊடகவியலாளர்களுக்கு ஏதும் அசம்பாவிதம் ஏற்படுத்தப்பட்டால் நாம் பார்த்துக் கொண்டு இருக்கமாட்டோம்.
எனவே உரிய கௌரவம் கிடைக்காத யாழ்.மாநகர சபைக் கூட்டங்களை பகிஷ்கரிக்குமாறு ஊடக அறிக்கை மூலம் வேண்டுகோள் விடுகிறேன்.
6 hours ago
6 hours ago
6 hours ago
20 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
6 hours ago
6 hours ago
20 Dec 2025