2025 மே 21, புதன்கிழமை

நயினாதீவில் நீந்தி கரையொதுங்கிய இந்திய மீனவர்கள்

Kogilavani   / 2011 ஜூன் 04 , மு.ப. 05:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

இந்திய மீனவர்கள் நால்வர் பயணித்த படகு கவிழ்ந்துவிட்ட நிலையில், அவர்கள் நால்வரும் நேற்று மாலை நயினாதீவுக் கடற்கரையோரம் கரை ஒதுங்கியதாக ஊர்காவற்துறை கடற்படையினர் தெரிவித்தனர்.

இவர்களை ஊர்காவற்துறைப் பொலிஸார் கைது செய்து ஊர்காவற்துறை நீதிமன்றில் ஆஜர்படுத்தியபோது, ஊர்காவற்துறை நீதிவான் திருமதி ஜோய் மகாதேவன் இவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டதுடன், இம் மீனவர்கள் தொடர்பாக சட்டமா அதிபருக்கும், யாழ். இந்தியத் துணைத் தூதுவருக்கும், வெளிவிவகார அமைச்சுக்கும் அறிவிக்குமாறு பொலிஸாருக்கு உத்தரவு பிறப்பித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .