2025 மே 21, புதன்கிழமை

வெளிநாட்டு இராணுவ அதிகாரிகள் யாழ் விஜயம்

Super User   / 2011 ஜூன் 04 , மு.ப. 09:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை இராணுவத்தின் ஏற்பாட்டில் கடந்த வாரம் கொழும்பில் இடம்பெற்ற யுத்த அனுபங்களை பகிர்ந்துகொள்ளும் சர்வதேச கருத்தரங்கில் கலந்துகொள்வதற்காக வந்த வெளிநாட்டு பிரதிநிகளின் குழுவொன்று நேற்று வெள்ளிக்கிழமை யாழப்பாணத்திற்கான விஜயத்தை மேற்கொண்டனர்.

இதன்போது இவர்கள் யாழ். இராணுவ கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் ஹத்துருசிங்கவை சந்தித்துடன் யாழ்ப்பாணத்திலுள்ள பொது நூலகம், டச்சு கோட்டை மற்றும் நல்லூர் கோயில் உட்பட பல இடங்களுக்கு விஜயம் செய்தனர்.

மேஜர் ஜெனரல் ஹத்துருசிங்கவுடனான சந்திப்பின் போது யாழ்பாணத்தின் தற்போதைய நிலைமைகள் தொடர்பிலும் அரசாங்கத்தின் செயற்பாடுகளின் முன்னேற்றம் குறித்தும் விளக்கமளிக்கப்பட்டது.

இந்தியா, ஜப்பான், ஸிம்பாப்வே, உக்ரேன், செக் குடியரசு, கென்யா, தன்சானியா, போலந்து, நைஜீரியா, மாலைதீவு, கானா, சாம்பியா, சீனா பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளின் பிரதிநிகள் யாழ். விஜயத்தில் கலந்துகொண்டனர்.


 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .