2025 மே 21, புதன்கிழமை

உண்ணாவிரதப் போராட்டம் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டமாக மாற்றம்

A.P.Mathan   / 2011 ஜூன் 04 , பி.ப. 07:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

யுத்ததினால் பாதிக்கப்பட்ட மக்கள் பிரச்சினையை வெளிக்கொண்டு வருவதற்காக சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தை தற்போது ஆரம்பித்துள்ளதாக போரினால் பாதிக்கப்பட்ட பிரதேச மக்கள் அமைப்பின் முக்கிய பிரதிநிதியும் அவ் அமைப்பின் செயற்பாட்டாளருமான ஜி.வி.சகாதேவன் தெரிவித்துள்ளார்.

நேற்று சனிக்கிழமை காலை 8.50 மணிக்கு ஆரம்பமான உண்ணாவிரதப்  போராட்டம் தற்போது சாகும்வரையான உண்ணாவிரதப் போராட்டமாக மாறியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

தழிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் ஆனந்தசங்கரியின் சொந்த மருமகனே இவரென தெரியவருகிறது. இருந்தபோதிலும் இதுவரையில் அவரது போராட்டத்தை எந்த அரசியல் கட்சிகளோ அமைப்புக்களோ பார்வையிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .