2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

யாழ் அபிவிருத்திக்கு உதவ செக் குடியரசு தீர்மானம்

Kogilavani   / 2011 ஜூன் 05 , மு.ப. 10:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

யாழ்ப்பாணத்தில் அரசாங்கம் ஆரம்பித்துள்ள அபிவிருத்தித் திட்டங்களுக்கு உதவுவது குறித்து ஆராய்வதற்காக செக் குடியரசின் உயர்மட்ட அதிகாரிகள் குழுவொன்று நேற்று சனிக்கிழமை யாழ்ப்பாணத்திற்கு விஜயமொன்றினை மேற்கொண்டது.

இதன்போது, செக் குடியரசின் வெளிவிவகார பிரதியமைச்சர் தோமஸ் டப், செக். குடியரசு வெளிவிவாகார அமைச்சின் செயலாளர் ருடோல்வ் ஹைகில், செக் குடியரசின் இலங்கைக்கான தூதுவர் மிலஸ்லோவ் ஸ்டெஸ்க் உட்பட பலர் வடமாகாணத்திற்கான ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜி.ஏ.சந்திரசிறி மற்றும் யாழ் மாவட்ட  அரசாங்க அதிபர் இமெல்டா சுகுமார் ஆகியோரை சந்தித்து அவர்களது விஜயம் குறித்து கலந்துரையாடினர்.

பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரனும் இக்கலந்துரையாடல்களில் கலந்துகொண்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X