Super User / 2011 ஜூன் 05 , பி.ப. 02:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ஹேமந்த்)
நாடாளுமன்ற உறுப்பினர் முருகேசு சந்திரகுமார் மற்றும் வட மாகாண ஆளுநர் ஜீ.ஏ.சந்திரசிறி ஆகியோரால் விரைவுபடுத்தப்பட்ட விசேட புனரமைப்புத் திட்டத்தின் கீழ் கிளிநொச்சி நகர பகுதி வீதிகள் அபிவிருத்தி செய்யப்படும் நடவடிக்கை இன்று ஆரம்பமாகியுள்ளது.
இதனடிப்படையில் கிளிநொச்சி நகரிலும் அதனை அண்மித்த பகுதிகளிலும் நீண்டகாலமாக புனரமைப்பு செய்யப்படாதிருந்த வீதிகளைத் துரித கதியில் முதற்கட்டமாகப் புனரமைப்புச் செய்யும் நடவடிக்கையை வட மாகாண சபையும் படைத்தரப்பும் இணைந்து இன்று ஆரம்பித்துள்ளன.
ஏற்கனவே கிளிநொச்சி நகரத்துக்கும் பிற பிரதேசங்களுக்கும் இடையிலான வீதிகளைப் புனரமைக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
8 hours ago
8 hours ago
8 hours ago
20 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
8 hours ago
8 hours ago
20 Dec 2025