Suganthini Ratnam / 2011 ஜூன் 06 , மு.ப. 04:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கவிசுகி)
யாழ். வேலணை பகுதியைச் சேர்ந்த பாடசாலை மாணவன் ஒருவன் காணாமல் போயுள்ளதாக ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையத்திலும் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். அலுவலகத்திலும் இன்று திங்கட்கிழமை அம்மாணவனின் தந்தையால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
வேலணை நடராஜா மகாவித்தியாலயத்தில் தரம் 10இல் கல்வி கற்கும் சுந்தரலிங்கம் அனுஷ்டன் (வயது 16) என்ற மாணவனே காணாமல் போயுள்ளதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேற்படி மாணவன் கடந்த 30ஆம் திகதி யாழ். வேலணையிலுள்ள தனது வீட்டிலிருந்து யாழ். நகர் நோக்கிச் சென்ற வேளையிலேயே காணாமல் போயுள்ளாரென்று முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக ஊர்காவற்றுறைப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். அம்மாணவனைத் தேடும் முயற்சியில் தாம் ஈடுபட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.
6 hours ago
6 hours ago
6 hours ago
20 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
6 hours ago
6 hours ago
20 Dec 2025