2025 மே 21, புதன்கிழமை

ஜி.வி.சகாதேவன் சாகும்வரையிலான உண்ணாவிரதத்தை கைவிட்டார்

Suganthini Ratnam   / 2011 ஜூன் 06 , மு.ப. 05:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

(கவிசுகி)

சாகும்வரையிலான உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு வந்த போரினால் பாதிக்கப்பட்ட பிரதேச மக்கள் அமைப்பின் பிரதிநிதியான ஜி.வி.சகாதேவன் தனது சாகும்வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தை இன்று திங்கட்கிழமை கைவிட்டுள்ளார்.

ஜனநாயக ரீதியிலான உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் எம்மை  எந்த சக்தியோ அல்லது எந்த அமைப்போ நேரில் வந்து சந்திக்கவில்லை. இந்த நிலையில், மிக வருத்தத்துடன் எமது சாகும்வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தை கைவிடுவதாக ஜி.வி.சகாதேவன் தெரிவித்தார்.

இருப்பினும் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் பிரச்சினைகளை வெளிக்கொணருவதற்கான எமது போராட்டம் தொடருமெனவும் அவர் கூறினார்.

போரினால் பாதிக்கப்பட்ட மக்களின் பிரச்சினைகளை தீர்க்குமாறு கோரி யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டு அரங்கத்திற்கு அருகாமையில் போரினால் பாதிக்கப்பட்ட பிரதேச மக்கள் அமைப்பின் பிரதிநிதியான ஜி.வி.சகாதேவன் நேற்றுமுன்தினம் சனிக்கிழமை முதல் சாகும்வரையிலான உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு வந்தமை  குறிப்பிடத்தக்கது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .