Suganthini Ratnam / 2011 ஜூன் 06 , மு.ப. 05:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
( இர்ஷாத் றஹ்மத்துல்லா )
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் முதற் பெண் துணைவேந்தராகப் பதவியேற்ற பேராசிரியர் வசந்தி அரசரட்னத்தை அவரது பிறந்த மண்ணில் வாழ்த்திக் கௌரவிக்கும் நிகழ்வு சாவகச்சேரியில் நடைபெறவுள்ளது.
சாவகச்சேரி சிவன் கோவில் வீதியிலுள்ள தென்மராட்சிக் கலைமன்றக் கலாசார மண்டபத்தில் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2 மணிக்கு இந்த நிகழ்வு நடைபெறவுள்ளது.
விழாக்குழுவின் தலைவரும் சாவகச்சேரி இந்துக் கல்லூரி அதிபருமான அ.கயிலாயபிள்ளை தலைமையில் நடைபெறவுள்ள இந்த நிகழ்வில் முதல் நிகழ்வாக சாவகச்சேரி முத்துமாரி அம்பாள் ஆலயத்திலிருந்து வரவேற்பு ஊர்வலம் நடைபெறும்.
இதன்போது, வசந்தம் என்ற சிறப்பு மலர் வெளியிட்டு வைக்கப்படவுள்ளது. கோப்பாய் ஆசிரிய கலாசாலை விரிவுரையாளர் ச.லலீசன் மலரின் வெளியீட்டுரையை ஆற்றுவார். யாழ். அரச அதிபர் திருமதி இமெல்டா சுகுமார் சிறப்பு மலரை விழா நாயகிக்கு வழங்கிக் கௌரவிப்பார்.
6 hours ago
6 hours ago
6 hours ago
20 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
6 hours ago
6 hours ago
20 Dec 2025