Menaka Mookandi / 2011 ஜூன் 06 , மு.ப. 06:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கவிசுகி)
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், உதயன் பத்திரிகை நிறுவனத்தின நிர்வாக இயக்குநருமான ஈ.சரவணபவனுக்கு தொலைபேசி மூலம் கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
நேற்றிரவு 9.25 மணியளவில் தனது கைத்தொலைபேசிக்கு அநாமதேய அழைப்பு ஒன்று வந்துள்ளதாகவும் அந்த அழைப்பில் மறு தரப்பில் இருந்து பேசிய ஆண் நபர் 'நீங்கள் தொடர்ந்தும் அரசுக்கும், அமைச்சர்களுக்கும் எதிராக கருத்துக்கள் வெளியிடுவதை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும், இரண்டு நாட்களுக்குள் நாட்டை விட்டுத் தப்பியோடாவிட்டால் மரண தண்டனை விதிக்கப்பட்டு அது நிறைறேற்றப்படும்' என அச்சுறுத்தியதாக சரவணபவன் எம்.பி. - தமிழ்மிரருக்கு தெரிவித்தார்.
இந்த தொலைபேசி அச்சுறுத்தல் குறித்து யாழ்.பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் இச்சம்பவம் தொடர்பாக யாழ். பொலிஸார் உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளனர் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
6 hours ago
6 hours ago
6 hours ago
20 Dec 2025
xlntgson 0776994341;0716597735 sms only Monday, 06 June 2011 09:22 PM
ஏன்? நீங்கள் குறுஞ்செய்தி மூலமே தொடர்பு கொள்கின்றீர்கள் அல்லது மின்னஞ்சல் மூலம் என்று கேட்கின்றனர் பலர்! தெரியாதவர்களை யாரென்று தெரிந்து கொள்ள இயலாமல் ஏச்சு, பேச்சு, நக்கல், நையாண்டி, மிரட்டல் அதனால் தான் நான் தொலைபேசியில் கதைப்பதே இல்லை. தெரியாத ஆட்களோடு, நானும் ஒரு பிரபலமாக விரும்ப வில்லை மிகவும் அடக்கம் அன்பு அறம் அமைதி! மிக மிக அடக்கம்!
எட்டடிக்குள் போவதற்கு முன்னரே!
சரவணபவனும் என்னை பின்பற்றலாம்!
அலுவலகத்தில் இருக்கும் வசதிகள் எனக்கு இல்லை, யார் பேசினார் என்று கண்டு பிடிக்க இயலுமே பொலீசுக்கு!
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
6 hours ago
6 hours ago
20 Dec 2025