Suganthini Ratnam / 2011 ஜூன் 08 , மு.ப. 04:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கவிசுகி)
யாழ். குடாநாட்டில் யுத்தத்திற்குப் பின்னரான காலப்பகுதியில் பிள்ளைகளினால் கைவிடப்படும் வயோதிபப் பெற்றோர்களின் எண்ணிக்கை அதிகரித்துச் செல்வதாக கைதடி முதியோர் பாராமரிப்பு நிலைய நிர்வாகம் தெரிவித்துள்ளது.
பாதுகாப்பு, சுகாதாரம், போஷாக்கான உணவு என்பவற்றை வயோதிபப் பெற்றோர்களுக்கு கொடுப்பதற்கு பிள்ளைகள் தவறியுள்ளனர். வயோதிபக் காலத்தில் அவர்கள் முதியோர் இல்லங்களில் ஒப்படைக்கப்படுகின்றனர்.
அதிகரித்த வேலைப்பளு மற்றும் சுயகௌரவம் ஆகியவற்றால் பிள்ளைகள் தமது வயோதிபப் பெற்றோர்களை பராமரிக்க தவறுகின்றனர். இதனால் வயோதிபப் பெற்றோர்களை பராமரிப்பதற்கு பிள்ளைகள் முதியோர் இல்லங்களை நாடுவதாகவும் கைதடி முதியோர் பராமரிப்பு நிலைய நிர்வாகம் குறிப்பிட்டது.
8 hours ago
8 hours ago
8 hours ago
20 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
8 hours ago
8 hours ago
20 Dec 2025