2025 மே 21, புதன்கிழமை

யாழ். சுற்றுலாத்துறையை அபிவிருத்தி செய்ய அவுஸ்திரேலிய அரசு ஆர்வம்

Kogilavani   / 2011 ஜூன் 08 , பி.ப. 12:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசகி)
யாழ். மாவட்டத்தில் சுற்றுலாத்துறையை அபிவிருத்தி செய்வதற்கு அவுஸ்திரேலிய அரசு விருப்பம் கொண்டுள்ளதாக அந்த நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி இமல்டா சுமாரிடம் தெரிவித்துள்ளனர்.

போருக்கு பின்னரான யாழ்ப்பாணத்தின் அபிவிருத்தி நிலமை தொடர்பாகவும் மீள்குடியேற்றம் எவ்விதம் நடைபெறுகின்றது என்பதை நேரில் பார்வையிடுவதற்காக யாழ்ப்பாணத்திற்கு இன்று புதன்கிழமை விஜயமொன்றினை மேற்கொண்ட அவுஸ்திரேலிய செனட்டர்களான ஸ்ரீபன் ஹட்சின்ஸ்,  டாஸ்மானியா மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களான டொன் ரன்டில், ஷேர்மன் ஸ்டோன் ஆகியோர் அரசாங்க அதிபரை சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தியுள்ளனர்

இச் சந்திப்பு யாழ். மாவட்டச் செயலகத்தில் இன்று நடைபெற்றது.   
 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X