2025 மே 21, புதன்கிழமை

யாழ். அச்சுவேலியில் சதொச விற்பனை நிலையம் திறப்பு

Kogilavani   / 2011 ஜூன் 11 , மு.ப. 07:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

யாழ் அச்சுவேலி பகுதியில் அரசாங்கத்தினால் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள சதொச விற்பனை நிலையத்தை பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா  இன்று சனிக்கிழமை   திறந்து வைத்தார்.

இந்நிகழ்வில் கோப்பாய் பிரதேச செயலர் பிரதீபன், கோப்பாய் வர்தக சங்கப்பிரதிநிதிகள்  மற்றும் கோப்பாய் பகுதி பொலிஸ் உயரதிகாரிகள், பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்

யாழ். அச்சுவேலி பகுதியில் திறக்கப்பட்ட சதொச விற்பனை நிலையம் நாடளாவிய ரீதியில் 240வது சதொச விற்பனை நிலையமாகும், மக்கள் தமக்குத் தேவையான பொருட்களை  இலகுவில் ஒரே கூரையின் கீழ் பெற்றுக் கொள்ளும் விதமாக நாடளாவிய ரீதியில் மஹிந்த சிந்தனையின் அடிப்படையில் சதோச விற்பனை நிலையங்கள் அமைக்கப்பட்டு வருவதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா  இதன்போது தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X