2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

பாஷையூர் புனித அந்தோனியார் ஆலய தேர்ப் பவனி; பவனிக்கு தடையாகவுள்ள பாறாங்கற்கள் அகற்றும் பணி

Suganthini Ratnam   / 2011 ஜூன் 12 , மு.ப. 06:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

யாழ். பாஷையூரிலுள்ள பிரசித்தி பெற்ற புனித அந்தோனியார் ஆலயத்தின் திருச்சொரூப தேர்ப் பவனியை முன்னிட்டு பவனிக்கு இடையூறாகக் காணப்படும் பாறாங்கற்களை அகற்றும் பணி தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக யாழ். மாநகரசபை தெரிவித்துள்ளது.

யாழ். பாஷையூரில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற புனித அந்தோனியார் ஆலயத்தின் திருவிழா கடந்த 3ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமான  நிலையில்  திருச்சொரூப தேர்ப் பவனி  நாளை திங்கட்கிழமை நடைபெறவுள்ளது.

பாஷையூர் கடற்கரை வீதியில் கொட்டப்பட்டுக் காணப்பட்ட பாறாங்கற்களை அகற்றும் பணியில் யாழ். மாநகரசபையின் பல ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். வீதிகளில்  தேர்ப்பவனிக்கும்  பொதுமக்களுக்கும் இடையூறாகக் காணப்படும் பாறாங்கற்கள் அகற்றப்பட்டு வருகின்றன. 

இப்பணி மாநகர முதல்வரின் விசேட பணிப்பின் பெயரில் இடம்பெற்றது வருகிறது. மாநகர முதல்வரின் செயலாளர் கு.பற்குணராசா, பொறியியலாளர் கெண்டர்சன் ஆகியோர் பாறாங்கற்கள் அகற்றும் பணிகளை பார்வையிட்டுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X