Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 21, புதன்கிழமை
Super User / 2011 ஜூன் 14 , பி.ப. 05:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கிரிசன்)
பொது நிர்வாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சினால் யாழ் மாவட்ட கிராம அலுவலர்களுக்கு இடையே நடத்தப்பட்ட முகாமைத்துவப்
போட்டியில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற கிராம அலுவலர்களை கௌரவிக்கும் நிகழ்வு யாழ்ப்பாணம் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி ரூபிணி வரதலிங்கம் தலைமையில் யாழ் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இன்று பகல் 10.45 மணியளவில் இடம் பெற்றது.
இந் நிகழ்வில் யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி இமெல்டா சுகுமார் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டதுடன் சிறப்பு விருந்தினர்களாக யாழ் செயலக பிரதம கணக்காளர் சண்முகரெட்னம் ஹேமலதா செல்வராசா சிறுவர் நிதியத்தின் தலைவர் செ.இரமேஸ் உறுப்பினர் முதலியார் உட்பட மற்றும் பலர் கலந்து கொண்டாhகள் .
முதல் மூன்று இடங்களைப் பெற்ற கிராம அலுவலர்களான உடுவில் பிரதேச செயலகத்தைச் சேர்ந்த மசினெட் யூ10யின் (முதலாம் இடம்), கரவெட்டி பிரதேச செயலகத்தைச்சேர்ந்த எஸ்.லலித் (இரண்டாம் இடம்), தெல்லிப்பளை பிரதேச செயலகத்தைச் சேர்ந்த கே.பூபாலசிங்கம் (மூன்றாம் இடம்) ஆகியோர் முறையே யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் மேலதிக அரசாங்க அதிபர் மற்றும் முதலியார் ஆகியோரினால் வெற்றிக் கிண்ணங்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கி கௌரவி;க்கப்பட்டார்கள்.
இந் நிகழ்வில் யாழ். மாவட்ட பிரதேச செயலாளர்கள், கிராம அலுவலர்களும் கலநது கொண்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago
32 minute ago
20 May 2025